ஈரோடு: அத்திக்கடவு-அவிநாசி திட்ட சோதனை முடிந்ததும் முதலமைச்சர் தொடங்கி வைப்பார் என வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்து உள்ளார். ஈரோடு, ரங்கம்பாளையத்தில் கூட்டுறவு துறை சார்பில் மகளிர் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்குதல் மற்றும் புதிய ரேஷன் கடைகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தியூர் தி.மு.க., – எம்.எல்.ஏ., வெங்கடாசலம் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டு பயனர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். […]