“இன்று மகளிர் தினம் மட்டுமல்ல; மனித குலத்துக்கு முக்கியமான நாள்” – முதலமைச்சர்!

திமுக அரசு பெண்களுக்கு ஏராளமான திட்டங்களை கொண்டுவந்துள்ளது என்றும், பெண்களுக்கு சொத்துரிமை, அரசு பணியில் 33 விழுக்காடு இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டு, பின்னர் அது 40 விழுக்காடாக உயர்த்தப்பட்டதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் பங்கேற்ற முதலமைச்சர், பெண்கள் முன்னேற்றத்துக்காக சிறப்பாக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மார்ச் 8 என்பது மகளிர் தினம் மட்டுமல்ல; மனிதகுலத்துக்கும் மனித உரிமைகளுக்கும் முக்கியமான நாள் என்றார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.