பாஜக ஐடி விங் கூண்டோடு ராஜினாமா..!!

தமிழ்நாடு பாஜகவின் சமூக ஊடக பிரிவு தலைவராக இருந்தவர் சிடிஆர் நிர்மல் குமார். இந்த நிலையில் திடீரென்று கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். அவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதேபோல பாஜக ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் பாஜகவில் இருந்து விலகினார்.

இந்த நிலையில், சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐ.டி. பிரிவு நிர்வாகிகள் 13 பேர் கூண்டோடு கட்சியில் இருந்து விலகி உள்ளனர். இது பாஜகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

துஷ்ட சக்திகளிடம் இருந்து காத்து கொள்ளவே பாஜகவில் இருந்து விலகுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். விலகிய அனைவரும் விரைவில் அதிமுகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.