நாட்டில் இதுவரையில் முட்டை இறக்குமதி செய்யப்படவில்லை என்று வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் நளின் பெர்னாண்டோ இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டில் முட்டை உற்பத்தியை அதிகரித்து உள்ளூர் சந்தையில் அதன் விலையில் சமநிலை ஏற்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
சபையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே வர்த்தக அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்
முட்டைக்கு மாத்திரமின்றி ஏனைய பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்ற போதும் உற்பத்தியில் ஏதேனும் வீழ்ச்சி ஏற்பட்டாலும் அது தொடர்பில் தலையிடுவது வர்த்தக அமைச்சின் பொறுப்பாகும்.கடந்த ஒரு மாதமாக முட்டை மற்றும் முட்டை விலையில் பிரச்சினைகள் எதிர்நோக்கப்பட்டன. அவற்றை இறக்குமதி செய்வது அல்லது வழங்குவது மற்றும் பொருட்களை மக்களுக்கு மலிவு விலையில் வழங்குவது அல்லது அதுதொடர்பான பிரச்சினைகளில் தலையிடுவது நுகர்வோர் விவகார அமைச்சின் பொறுப்பாகும்.
கட்டுப்பாட்டு விலையை விதித்து முட்டை உற்பத்தியாளர்களுக்கு நியாயம் வழங்க முயற்சித்தேன், ஆனால் முட்டை உற்பத்தி 40 வீதமாக குறைந்ததாக உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டதாக தெரிவித்த அமைச்சர் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டைக்கு அதிக கேள்வி நிலவும்.
இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை இராணுவத்தினருக்கு வழங்கி பறவைக் காய்ச்சல் பரிசோதனை செய்ததாகக் கூறப்படும் விடயம் உண்மைக்குப்புறம்பானது. இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசனை வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.