சுற்றுலாப்பயணிகள் கண் முன்னே இளம்பெண்ணைக் கடித்துக் குதறிய சுறா : அவரது தற்போதைய நிலை

பிரேசில் நாட்டில் சுற்றுலாப்பயணிகள் கண் முன்னே அழகிய இளம்பெண் ஒருவரை சுறா ஒன்று கடித்துக் குதறியது.

இரண்டாவது தாக்குதல்

கடந்த ஞாயிற்றுக்கிழமை, அதாவது மார்ச் 5ஆம் திகதி, பிரேசில் நாட்டின் Pernambuco என்னும் இடத்தில் அமைந்துள்ள Piedade என்னும் கடற்கரையில் 14 வயது சிறுவன் ஒருவனை சுறா ஒன்று கடித்துக் குதறியது

அந்த தாக்குதலில் தனது காலை இழந்தான் அந்த சிறுவன்.
அடுத்த நாள், அதாவது 6ஆம் திகதி, Kaylane Timóteo Freitas என்னும் பதின்ம வயது பெண் அதே கடற்கரையில் சுறாவால் தாக்கப்பட்டுள்ளார்.

அந்த பெண்ணை சுறா தாக்குவதைக் கண்ட மக்கள் ஓடோடிச் சென்று அவரை மீட்டுள்ளனர்.

உடனடியாக ஹெலிகொப்டர் மூலம் Kaylane மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில், Kaylaneஉடைய இடது கையின் ஒரு பகுதியை அகற்றவேண்டிவந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதற்கிடையில், ஒரே கடற்கரையில் இரண்டு பேர் அடுத்தடுத்து சுறாவால் தாக்கப்பட்டாலும், அதற்குப் பின்பும் மக்கள் தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்தார்கள், பாதுகாவலர்கள் அவர்களை கட்டாயப்படுத்தி தண்ணீரிலிருந்து ஆகற்றவேண்டியிருந்தது என்கிறார், அந்தக் கடற்கரைக்கு எதிரே அமைந்துள்ள கட்டிடத்தில் வசிக்கும் Andréa Caribé என்பவர்.

வீடியோவை காண

சுற்றுலாப்பயணிகள் கண் முன்னே இளம்பெண்ணைக் கடித்துக் குதறிய சுறா : அவரது தற்போதைய நிலை | Shark Bit Young Woma

Image: CEN

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.