தெறிக்கும் மீம்ஸ்.. குரூப் 4 முடிவுகள் எப்பொழுது..? "டிஎன்பிஎஸ்சி"யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!!

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம் மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 9,870 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்வில் தமிழக முழுவதும் 18,36,535 போட்டியாளர்கள் தேர்வெழுதினர். இந்த தேர்வின் முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. இந்த நிலையில் அரசுப் பணிகளில் மகளிருக்கான இடஒதுக்கீட்டு விதிகளில் உரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமல்படுத்த கூடுதல் அவகாசம் தேவைப்பட்டதால் குரூப்-4 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. அதன்பிறகு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர கால அட்டவணையில் பிப்ரவரி 2-வது வாரம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால் தேர்வு முடிந்து பல மாதங்களாகியும் முடிவுகள் வெளியிடப்படவில்லை.

இதனால் குரூப்-4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி விரைவாக வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில் குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.

ஆனால் தற்போது வரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதனால் கொதித்தெழுந்த தேர்வர்கள் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ட்விட்டரில் குரூப் 4 தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர். இந்திய அளவில் #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் இது தொடர்பான மீம்ஸ்களை நெட்டிசன்கள் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.