என் பெயரில் வாய்ப்பு தருவதாக மோசடி; வலிமை வில்லன் எச்சரிக்கை

சோசியல் மீடியாவில் பிரபலங்களின் பெயரில் போலியாக கணக்குகள் துவக்கி அதன்மூலம் பணம் சம்பாதிக்கும் நபர்கள் அவ்வப்போது தங்கள் வேலையை காட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் மலையாள நடிகர் தினேஷ் பிரபாகர் தனது பெயரில் சோசியல் மீடியாவில் கணக்கு துவங்கப்பட்டு சினிமாவில் விளம்பர படங்களில் நடிப்பவர்களுக்கு வாய்ப்புகள் பெற்றுத் தரப்படும் என கூறி மோசடி நடப்பதாக ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

மலையாள திரை உலகில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து ஓரளவு பிரபலமான தினேஷ் பிரபாகர், கடந்த வருடம் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தில் வில்லனுக்கு உதவும் போலீஸ் அதிகாரியாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமல்ல மாதவன் நடித்த ராக்கெட்ரி படத்திலும் மோசமான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மட்டுமல்ல, மலையாளத்திலும் கூட இன்னும் அதிகமாக பிரபலமானார். இந்த நிலையில் தான் சினிமாவில் வாய்ப்பு பெற்று தருவதாக கூறி தனது பெயரில் பண மோசடி நடப்பதாக கேள்விப்பட்டு, சினிமா ஆசையில் வாய்ப்பு தேடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பதிவு ஒன்றை இட்டுள்ளார் தினேஷ் பிரபாகர்.

அதில் தன் பெயரில் யாரோ ஒருவர் மோசடி கணக்கு துவங்கியுள்ளார் என்றும் சினிமா மற்றும் விளம்பர படங்களில் நடிக்க வைப்பதாக கூறி பணம் கேட்டால் தரவேண்டாம் என்றும் சம்பந்தப்பட்ட நபர் குறித்து காவல்துறையில் புகார் அளிக்குமாறு எச்சரிக்கை செய்துள்ளார். அப்படி யாரேனும் இதற்குமுன் பணம் கொடுத்திருந்தால் கூட சம்பந்தப்பட்ட நபரின் நம்பகத்தன்மையை சோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார் தினேஷ் பிரபாகர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.