திருவனந்தபுரம், :கேரள பல்கலையில், மாணவியருக்கு ஆறு மாத பேறுகால விடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, உயர் கல்வித் துறையின் கீழ் வரும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும், மாணவியருக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கவும், 18 வயதுக்கு மேற்பட்ட மாணவியருக்கு மகப்பேறு விடுப்பு வழங்கவும் முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுஇருந்தார்.
மாதவிடாய் விடுப்பு உட்பட 73 சதவீத வருகைப் பதிவு இருந்தால் போதும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து, திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலையில் மாணவியருக்கு மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்களின் அனுமதியை அடுத்து, மாணவியருக்கு ஆறு மாதம் பேறுகால விடுப்பு வழங்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement