டெல்லி மதுக் கொள்கை வழக்கில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவிடம் அமலாக்க இயக்குனரகம் நாளை விசாரணை நடத்த உள்ளது.
டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து வருமானத்தை அதிகரிக்கவும், மதுபான விற்பனை நிலையங்களின் சமமான விநியோகத்தை உறுதி செய்வதற்கும், கள்ளச்சந்தை மற்றும் மாஃபியா ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் டெல்லியை 32 மண்டலங்களாகப் பிரித்து அதில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் 27 மதுபான விற்பனை கடைகள் வைக்கப்பட்டது. தனியார் பார்கள் மட்டும் நகரத்திற்கு வெளியே இயக்கப்பட்டது.
இந்தநிலையில் டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாக துணைநிலை ஆளுநர் குற்றம்ட்சாட்டினார். மேலும் மதுபான கொள்கை மூலம் பெறப்பட்ட ஊழல் பணத்தை தான் கோவா சட்டப்பேரவை தேர்தலுக்கு ஆம் ஆத்மி கட்சி பயன்படுத்தியது என பாஜக குற்றம்சாட்டியது. அதேபோல் இந்த ஊழலில் தென்னிந்திய அதிகாரப் புள்ளிகளுக்கு தொடர்பிருப்பதாக கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐயும், அமலாக்கத்துறை இயக்குநரகம் விசாரித்து வருகிறது.
டெல்லி புதிய மதுபான கொள்கை விவகாரத்தில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா சிபிஐ – ஆல் கடந்த கடந்த 26ம் தேதி கைது செய்யப்பட்ட விசாரிக்கப்பட்டுவருகிறார். இந்தநிலையில் தான் தெலங்கான முதல்வரின் மகள் கவிதாவிற்கு அமலாக்கத்துறை நாளை ஆஜராஜ சம்மன் அனுப்பியுள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் அருண் ராம்சந்திர பிள்ளையை மார்ச் 13 வரையும், மதுபான வியாபாரி அமந்தீப் தாலை மார்ச் 21 வரையும் நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்ட மறுநாள் கவிதாவிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 12ம் தேதி ஹைதராபாத்தில் சிபிஐ 7 மணி நேரத்திற்கும் மேலாக கவிதாவிடம் விசாரணை நடத்தியது குறிப்பிடதக்கது.
இந்தநிலையில் தான் டெல்லி மதுக் கொள்கை வழக்கில் பயனடைந்த தென்னிந்திய அதிகாரத்துவ அமைப்பில் தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா இருப்பதாக அமலாக்க இயக்குனரகம் குற்றம் சாட்டியுள்ளது. நாளை ஆஜராக சொல்லும் அமலாக்கத்துறை சம்மனுக்கு வலுவாக கவிதா எதிர்வினை ஆற்றியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “அரசியலில் பெண்களின் பிரதிநிதிதுவத்தை அதிகரிக்கும் நாடாளுமன்றத்தி மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நீண்டநாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதைக் கண்டித்து எதிர்கட்சிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள மகளிர் அமைப்புகள் மார்ச் 10ம் தேதி டெல்லியில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தை அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தநிலையில் போரட்டம் நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பு எனக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்ற முறையில், விசாரணை நிறுவனங்களுக்கு நான் முழு ஒத்துழைப்பு அளிப்பேன். இருப்பினும், மகளிர் உண்ணாவிரத போராட்டம் காரணமாக, விசாரணைக்கு கலந்துகொள்ளும் தேதியில் சட்டரீதியான கருத்துக்களைப் பெறுவேன்.
எங்கள் தலைவர், முதல்வர் கே.சி.ஆர் மற்றும் ஒட்டுமொத்த பிஆர்எஸ் கட்சிக்கு எதிரான போராட்டத்திற்கும் குரலுக்கும் எதிரான இந்த மிரட்டல் தந்திரங்கள் எங்களைத் தடுக்காது என்பதை மத்தியில் ஆளும் கட்சியும் அறிய விரும்புகிறேன். உங்கள் தோல்விகளை அம்பலப்படுத்தவும், இந்தியாவின் பிரகாசமான மற்றும் சிறந்த எதிர்காலத்திற்காக குரல் எழுப்பவும் தொடர்ந்து போராடுவேன்.
‘பாஜகவில் இணைந்துவிட்டால் உத்தமர்களா.?’ – பிரதமருக்கு எதிர்கட்சிகள் கடிதம்.!
அடக்குமுறை மக்கள் விரோத ஆட்சிக்கு தெலுங்கானா ஒருபோதும் அடிபணியவில்லை, ஒருபோதும் அடிபணியாது என்பதை டெல்லியில் உள்ள அதிகார வெறியர்களுக்கு நினைவூட்டுகிறேன். மக்களின் உரிமைகளுக்காக அச்சமின்றி கடுமையாகப் போராடுவோம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.