இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மூத்த மகன் செல்வராகவன், தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருகிறார். 2002ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் செல்வராகவன். தொடர்ந்து காதல் கொண்டேன், 7ஜி ரெய்ன்போ காலணி, புதுபேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டா ம் உலகம், என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
Andrea: நிர்வாண கோலத்தில் ஆண்ட்ரியா… முகம் சுளிக்கும் நெட்டிசன்ஸ்!
கடைசியாக செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படம் வெளியானது. இந்தப் படத்தில் தனது தம்பியான நடிகர் தனுஷை இயக்கிகயிருந்தார் செல்வராகன். நானே வருவேன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் வலம் வர தொடங்கியுள்ளார் செல்வராகவன்.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருந்த பீஸ்ட் படத்தில் அல்தாப் ஹுசைன் என்ற கதாப்பாத்திரத்தில் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கினார் செல்வராகவன். அதனை தொடர்ந்து சாணி காயிதம், நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்தார். கடைசியாக மோகன் ஜி இயக்கத்தில் வெளியான பகாசுரன் படத்தில் பீம ராசு என்ற முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் செல்வராகவன்.
தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் நடிகைகள்!
செல்வராகவன் சமீபத்தில் தனது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடினார். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள செல்வராகவன் அவ்வப்போது ஏதாவது ஒரு கருத்தை ஷேர் செய்து வருகிறார். தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிவதாக அறிவிக்கும் முன்பு கணவன் மனைவி உறவு குறித்து பதிவிட்டு வந்தார் செல்வராகவன்.
செல்வராகவனின் பதிவுகளை பார்த்த ரசிகர்கள் செல்வராகவனுக்கும் அவரது மனைவிக்கும் தான் பிரச்சனை என்று நினைத்தனர். கடைசியில் கதையே வேறாக இருந்தது. இதையடுத்து செல்வராகவன் ஷேர் செய்தும் பதிவுகள் கவனத்தை பெற்று வருகிறது. சமீபத்தில் தனக்கு நண்பர்களே இல்லை என கூறி தனது சோஷியல் மீடியாக பக்கத்தில் வருத்தப்பட்டிருந்தார் செல்வராகவன்.
Bayilvan Ranganathan: ராமாபுரம் தோட்டத்தில் ரஜினியை அடித்தாரா எம்ஜிஆர்? ரகசியத்தை உடைத்த பயில்வான்!
இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார் செல்வராகவன். அவர் பதிவிட்டிருப்பதாவது, பணம் கையில் வந்தால்தான் நிஜம். அதற்கு முன் கனவு காணாதீர்கள். செலவுகளை திட்டமிட வேண்டாம்!! அனுபவம். தத்துவம் அல்ல !! என குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் உண்மைதான் சார் என பதில் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.