தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆரம்பம் பாமக வலியுறுத்தி வருகிறது. இதன் பலனாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து முந்தைய அதிமுக அரசு சட்டம் கொண்டு வந்தது.
பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக அரசு பொறுப்பேற்றபின், ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு அரசு தரப்பில் போதிய விளக்கம் இல்லை என்று கூறி, சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதனையடுத்து பல மாத கால தாமத்திற்குபின் முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு அளித்த அறிக்கையின்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் செய்து மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்பதற்காக அக்டோபர் 28ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த மசோதாவை 4 மாதம் 11 நாட்கள் வைத்திருந்த ஆளுநர், தமிழக அரசுக்கு தடை செய்ய அதிகாரம் இல்லை உள்ளிட்ட காரணங்களை கூறி. ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் மீண்டும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக, அமைச்சர் ரகுபதி தகவல் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, “வருகிற பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு மசோதா ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்படும். ஆளுநரின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளித்துள்ளோம்” என்று தெரிவித்தார்.