இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு மறதி நோய் | More than one crore people in India suffer from amnesia

புதுடில்லி, நம் நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான முதியோருக்கு, மறதி நோய் எனப்படும் ‘டிமென்ஷியா’ பாதிப்பு இருக்கலாம் என்னும் அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.

நினைவாற்றல், எண்ண ஓட்டம், பகுத்தறிதல், முடிவெடுத்தல் போன்ற மனரீதியான செயல்பாடு களை முடக்கும், முதுமறதி நோயான டிமென்ஷியா பாதிப்பு, வரும் 2050ல் அதிகமாக இருக்கும் என, ‘நேசர் பப்ளிக் ஹெல்த் எமர்ஜென்சி கலெக் ஷன்’ என்ற இதழின் ஆய்வறிக்கை கூறுகிறது.

இது தொடர்பாக செயற்கை நுண்ணறிவு முறையில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியவர்களை வைத்து ஆராய்ச்சி செய்யப்பட்டது.

‘நியுரே எபிடெமியாலஜி’ என்ற பத்திரிகை நடத்திய இந்த ஆய்வின் முடிவில், நம் நாட்டில், 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஒரு கோடி பேருக்கு டிமென்ஷியா பரவல் இருப்பது தெரியவந்துள்ளது.

அதாவது, முதியோரில் ௮.௪௪ சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுஉள்ளனர்.

இது அமெரிக்காவில் 8.8 சதவீதமாகவும், பிரிட்டன் மற்றும் பிரான்சில் 9 சதவீதமாகவும், ஜெர்மனியில் 8 சதவீதமாகவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.