கொச்சி, கேரளாவின் கொச்சியில் குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, தொடர்ந்து காற்று மாசு நிலவுவதால், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளி லேயே முடங்க மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
மறு சுழற்சி
கேரளாவின் கொச்சி யில் உள்ள பிரம்மபுரத்தில் மிகப்பெரிய குப்பைக்கிடங்கு அமைந்துள்ளது.
நகரில் இருந்து எடுத்து வரப்படும் குப்பை கழிவுகள், இங்கு சேகரிக் கப்பட்டு மறு சுழற்சி செய்யப்படுகின்றன. 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மிகப்பெரிய குப்பைக்கிடங்கில், கடந்த 2ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது.
ஒரு வாரத்துக்கு மேலாக தீ பற்றி எரிந்து வரும் சூழலில், அதை கட்டுப்படுத்தும் பணியில் நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இந்த விபத்தால் ஏற்பட்ட புகை மண்டலம், காற்றை மாசுபடுத்தி உள்ளதால், பிரம்மபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதி களில் வசிப்பவர்கள் சுவாசப் பிரச்னை உட்பட பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி உள்ளனர்.
இதையடுத்து, அப்பகுதியை நேற்று எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் உமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர்.
குழப்பம்
அப்போது பேசிய மாவட்ட கலெக்டர் கூறிய தாவது:
பிரம்மபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், தீ விபத்து காரணமாக காற்று மாசுபட்டுள்ளதால், மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வர வேண்டாம். மிக அவசிய தேவை இருந்தால் மட்டும் வெளியே வருபவர்கள், உயர் ரக முகக்கவசமான ‘என் – 95’ அணிந்து வருவது நல்லது. 24 மணிநேரமும் செயல்படும் சுகாதாரக் கட்டுப்பாட்டு அறை மருத்துவக் கல்லுாரியில் செயல்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனை அழைத்து செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து மக்கள் குழப்பம் அடைய வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்