காஷ்மீரில் தொடரும் பதற்றம் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் போர் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனரக அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அச்சுறுத்தல் ஆய்வு அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த ஆய்வு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பயங்கரவாத குழுக்களை ஆதரிக்கும் செயற்பாடு
இந்தியாவுக்கு எதிராக செயற்படும் பயங்கரவாத குழுக்களை ஆதரிக்கும் போக்கை கொண்ட நீண்டகால வரலாற்றை பாகிஸ்தான் கொண்டுள்ளது.
இருப்பினும், பாகிஸ்தானின் தூண்டுதல்களுக்கு, பிரதமர் மோடி தலைமையின் கீழான இந்தியா, கடந்த காலத்தில் இருந்தது போல் இல்லாமல் இராணுவ படை உதவியுடன் பதிலடி கொடுக்கும் சாத்தியம் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காஷ்மீரில் தற்போது அமைதியற்ற சூழல் நிலவி வருகின்றமையினால் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் போர் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கிழக்கு லடாக் எல்லை பகுதியில் படைகளை குவித்து, இந்தியாவிற்கு எதிரான ஆக்கிரமிப்பினை அதிகரிக்கும் சீனா தொடர்பிலும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.