கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியாக்காவிளை காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண்பிரசாத், காவலர்களுக்கு துப்பாக்கி கையாளும் திறமை இல்லாததால் அவர்களை பயிற்சிக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார்.
முன்னதாக காவல்நிலைய வளாகத்தை ஆய்வு செய்த எஸ்பி, காவல்நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைகள் குறித்து கேட்டறிந்தார்.