மதுரை: சிவகங்கையில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. சிவகங்கையைச் சேர்ந்த ஓ.பி.எஸ். ஆதரவாளர் அசோகன் தொடர்ந்த வழக்கில் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏதும் ஏற்படாமல் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என டிஎஸ்பியிடம் உறுதி மொழிப் பத்திரம் தர ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.