டொனால்ட் ட்ரம்ப் தான் அடுத்த அமெரிக்க அதிபர்; ஜோ பைடனின் வீடியோ வைரல்.!

அடுத்த ஆண்டு அமெரிக்காவில் தேர்தல் நடைபெற உள்ளநிலையில், வருங்கால அதிபர் டொனால்ட் ட்ரம்ப் என தற்போதைய அதிபர் ஜோ பைடன் கூறும் வீடியோ வைரலாகிவருகிறது.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பல சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர். ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை கொன்றது, இஸ்ரேலை அங்கீகரித்தது, அமெரிக்க எல்லையில் மதில் சுவர் அமைத்தது, அகதிகளின் குழந்தைகளை பெற்றோர்களிடம் இருந்து பிரித்தது, வெள்ளை இனவாதத்தை மறைமுகமாக காட்டியது என பல சர்சைகளும் இவரது ஆட்சிகாலத்தில் தான் நடந்தன. பழமைவாத வலதுசாரி கட்சியான குடியரசு கட்சியின் சார்பில் கடந்த 2020ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் தோற்கடிக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து தாராளவாத ஜனநாயகக் கட்சியின் ஜோ பிடன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ளாத ட்ரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறாமல் முரண்டு பிடித்தார். அதைத் தொடர்ந்து ட்ரம்பின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை அமெரிக்க வரலாற்றில் மறக்க முடியாதது.

இந்தநிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்தார். “அமெரிக்காவின் மறுபிரவேசம் இப்போதே தொடங்குகிறது” என்று டிரம்ப் தனது மார்-ஏ-லாகோ தோட்டத்தில் நடந்த நிகழ்வில் கூறினார்.

மேலும் “அமெரிக்காவை மீண்டும் மகத்துவமானதாக, பெருமையானதாக மாற்றுவதற்காக இன்றிரவு நான் அமெரிக்க அதிபருக்கான என்னுடைய போட்டியிடலை அறிவித்துள்ளேன். எனவே இனி 2024ஆம் ஆண்டு தேர்தல் நாள் வரை, இதுவரை யாரும் போராடாததைப் போல் நான் போராடுவேன். நமது நாட்டை உள்ளிருந்து அழிக்க முயலும் தீவிர இடதுசாரி ஜனநாயகவாதிகளைத் தோற்கடிப்போம்,” என்று தனது உரையின்போது பேசினார்.

Daily Rasi Palan – 10.03.2023 | இன்றைய ராசிபலன் | Murugu Balamurugan | Samayam Tamil Lifestyle

இந்தநிலையில் அமெரிக்காவின் அடுத்த அதிபர் ட்ரம்ப் தான் எனக்கூறிய தற்போதைய அதிபர் ஜோ பைடனின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கடந்த வியாழனன்று பென்சில்வேனியாவில் பட்ஜெட் திட்டங்கள் குறித்த உரையில், தனது முன்னோடியும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியுமான டொனால்ட் ட்ரம்ப்பை “ஒருவேளை அவர் வருங்கால அதிபராகலாம்” எனக் குறிப்பிட்டார்.

தைவானுக்கு நவீன ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா; கொந்தளிக்கும் சீனா.!

குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்பைக் குறிப்பிட்டு, “நான் அந்த நேரத்தில் பதவிக்கு ஓடிக்கொண்டிருந்தேன், முன்னாள் அதிபரும் மற்றும் ஒருவேளை வருங்கால அதிபருடன் நான் பெரிய சண்டையிட்டதை நீங்கள் நினைவில் வைத்திருக்கலாம்” என்று ஜோ பிடன் கூறினார். 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் தனக்குப் போட்டியாக இருக்கும் டொனால்ட் ட்ரம்பை வருங்கால அதிபர் என்று ஜோ பைடன் கூறிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.