மன்னர் சார்லஸ், தன் தாயும் மறைந்த மகாராணியுமான இரண்டாம் எலிசபெத் அளித்த வாக்குறுதி ஒன்றை நிறைவேற்றியுள்ளார்.
அது என்ன வாக்குறுதி?
மறைந்த பிரித்தானிய மகாராணியார், தனது இளைய மகனான இளவரசர் எட்வர்டுக்கும் அவரது மனைவிக்கும் பட்டங்களை வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.
அதன்படி, மன்னர் சார்லஸ், இளவரசர் எட்வர்டின் 59ஆவது பிறந்தநாளில் அவருக்கு எடின்பர்க் கோமகன் என்ற பட்டத்தையும், அவரது மனைவியான சோபிக்கு எடின்பர்க் கோமகள் என்ற பட்டத்தையும் வழங்கியுள்ளார்.
Image: Getty Images
மிக உயர்ந்த பட்டம்
உண்மையில் எடின்பர்க் கோமகன் என்பது மிக உயர்ந்த ஒரு பட்டமாகும். காரணம், இதற்கு முன் அந்த பட்டத்தை வகித்தவர் மகாராணியாரின் கணவரான மன்னர் பிலிப் ஆவார்.
தற்போது அந்த பட்டம் இளவரசர் எட்வர்டுக்கு வழங்கப்பட்டுள்ளதால், அவர் வகித்துவந்த Earl of Wessex என்னும் பட்டம், இளவரசர் எட்வர்டின் மகனாகிய ஜேம்ஸை சென்றடைகிறது.
Image: Getty Images
Image: Getty Images
Image: Getty Images