வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஆஸ்திரேலியாவில் எந்தவித பிரிவினைவாத செயல்கள் மற்றும் நடவடிக்கைகளை பொறுத்து கொள்ள முடியாது எனக்கூறியுள்ள அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிஸ், ஹிந்து கோவில்கள் மீதான தாக்குதலை அனுமதிக்க முடியாது எனக்கூறியுள்ளார்.
இது தொடர்பாக அந்நாட்டு தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு, அல்பானிஸ் கூறுகையில், மக்களின் நம்பிக்கையை மதிக்கும் நாடாக ஆஸ்திரேலியா இருக்கும் என மோடியிடம் உறுதி அளித்துள்ளேன். பிரிவினைவாத நடவடிக்கைகளை நாங்கள் பொறுத்து கொள்ள மாட்டோம்.
ஹிந்து கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் தாக்குதல் நடத்தப்படுவதையும் பொறுக்க முடியாது.
இது போன்ற செயல்களுக்கு ஆஸ்திரேலியாவில் இடம் கிடையாது. இதற்கு காரணமானவர்கள், சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தர, போலீஸ் மற்றும் பாதுகாப்பு துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் சகிப்புத்தன்மை கொண்ட பன்முக கலாசார நாடு. பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கு அனுமதி கிடையது. இவ்வாறு ஆஸ்திரேலிய பிரதமர் கூறியதாக தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
டில்லியில், அந்தோணி அல்பானிசை சந்தித்த போது, ஆஸ்திரேலியாவில் ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் விவகாரத்தை அவரது கவனத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement