பூமியில் இருந்து 1,300 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரம் சூரியக் குடும்பத்தின் மிக சிறந்த ரகசியங்களில் ஒன்றை உள்ளடக்கியுள்ளது. V883 ஓரியோனிஸ் என்று அழைக்கப்படும் இது பல பொருள்களால் சூழப்பட்ட வட்டு வடிவிலான இளம் நட்சத்திரம் ஆகும். அந்த வட்டில்தான் நீர், நீராவி வடிவில் இருப்பதை விஞ்ஞானிகள் சந்தேகத்துக்கு இடமின்றி தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
சூரியக்குடும்பத்தின் நீர், இப்போது பூமியில் இருக்கும் நீர் ஆகியவை அனைத்துக்கும் முன்பாகவே உருவாகியுள்ளது. அத்துடன் நமது கிரகங்கள் வளர்ச்சியடைவும் அந்த நீர் ஆதாரம் உதவியுள்ளன.
இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள தேசிய வானொலியில், வானியலாளர் டோபின் கூறுகையில், “நாம் வசிக்கும் சூரிய குடும்பத்தில் உள்ள நீர், சூரியன் உருவாவதற்கு முன்பே தோன்றியுள்ளது என்பதை நாம் இப்போது கண்டுப்பிடித்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
பிரபஞ்சம் முழுவதும் நீர் பொதுவானது. இருந்தாலும் நீர் இல்லாமல் புவி வெளிர் நீல நிறப் புள்ளியாக இருக்காது. இது நம் கிரகத்தின் மேற்பரப்பை சுற்றி சுருண்டு, வளிமண்டலத்தில் நீராவியாக ஊடுருவி மழையாக பொழிகிறது. இது நமக்கு மிகவும் சாதாரணமாக தோன்றலாம். ஆனால் நீர் இல்லாமல் நம்மால் வாழ முடியாது. நீர்தான் வாழ்க்கையின் அனைத்து ரசாயன செயல்முறைகளுக்கும் தேவைப்படுகிறது.
கிரக உருவாக்கத்துக்கும் நீர்தான் மிக முக்கிய மூலப்பொருளாக உள்ளது. விண்வெளியில் உள்ள தூசிக்களிலிருந்து மேகங்களும் வாயுக்களிலிருந்து நட்சத்திரங்களும் பிறக்கின்றன. இது புவியீர்ப்பு விசையால் சுற்றி சுழன்று அந்த மேகத்திலிருந்து அதிகமான பொருள்களை உறிஞ்சத் தொடங்குகிறது. அப்படி உறிஞ்சப்பட்டவை ஒரு வட்டாக (Disk) மாறி இளம் நட்சத்திரத்துக்கு உணவளிக்க உதவுகின்றன.
நட்சத்திரம் வளர்ந்து முடிந்ததும் வட்டில் எஞ்சியிருப்பவற்றில் இருந்து கிரக அமைப்பின் மற்ற அம்சங்கள் உருவாகின்றன. இந்த செயல்பட்டில் நீர் ஒரு குறிப்பிட்ட பங்கை வகிப்பதாக கருதப்படுகிறது. கிரக வளர்ச்சியின் முதல் கட்டத்தில் துகள்கள் ஒன்றுடன் ஒன்றாக ஒட்டிக்கொள்ள கூடுதல் ஒட்டும் தன்மையை அளிக்கிறது.
“நட்சத்திரத்தை உருவாக்கும் மேகங்களிலிருந்து வட்டுகள் நேரடியாக தண்ணீரைப் பெறுகின்றன. மேலும் இந்த நீர் பெரிய ரசாயன மாற்றங்கள் இல்லாமல் நீராவியாக வட்டில் இணைகிறது” என டோபின் கூறியுள்ளார்.