எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசி பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்த இளைஞர் கைது

சிவகங்கை நகரில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மதுரை விமான நிலையம் வருகை தந்தார்.  அதில் விமானத்திலிருந்து இறங்கி விமான நிலைய ஓடுதளத்திலிருந்து விமான நிலைய வளாகத்தில் இருந்து வெளியே வர பேருந்தில் ஏறி வருகை தந்தார். அப்போது விமான நிலைய ஓடுதள பேருந்தில் அவருடன் பயணித்த சிங்கம்புணரியை சேர்ந்த யோகேஸ்வரன் என்பவர் மகன் ராஜேஷ் தனது முகநூல் பக்கத்தில் எடப்பாடி பயணிப்பதாக கூறி நேரலை செய்து கொண்டிருந்தார். 

அதில் “திடீரென எதிர்க்கட்சித் தலைவர் துரோகத்தின் அடையாளம் அண்ணன் எடப்பாடி உடன் பயணம் செய்கிறேன் என பேசிய அவர், தொடர்ந்து எடப்பாடியார் துரோகத்தின் அடையாளம் என்று ராஜேஷ் கூறியதும் கையை உயர்த்தி காமித்தார் எடப்பாடி பழனிச்சாமி. “சின்னமாவிற்கு துரோகத்தை பண்ணியவர். 10.5% இடஒதுக்கீட்டை தென்னாட்டு மக்களுக்கு எதிராக கொடுத்தவர் என கூறினார். இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியின்  பாதுகாவலர் உடனடியாக அவரது செல்போனை பறித்து விமான நிலைய பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தார். 

தொடர்ந்து., ராஜேஷை விமான நிலைய போலீசார் அவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜேஷ் சிங்கப்பூரில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சொந்த நாட்டிற்கு வந்ததும் தனது சர்ச்சை பேச்சால் தற்போது அந்த இளைஞர் சிக்கி உள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது தொடர்ந்து காவல்துறையிடம் அந்த இளைஞர் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் ஏதேனும் அரசியல் பின்பலத்தைச் சார்ந்தவரா அல்லது யாரேனும் தூண்டுதலின் பேரில் எடப்பாடி அருகே நின்று கொண்டு சமூக வலைதள பக்கமான பேஸ்புக்கில் துரோகத்தின் அடையாளம் எடப்பாடி எனக் கூறி வீடியோ வெளியிட்டுள்ளது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.