வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: கர்நாடகாவில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே ஓட்டுப்போடுவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் கூறியதாவது: முதல்முறையாக கர்நாடகாவில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வீட்டில் இருந்தபடி ஓட்டுப்போடுவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
இதற்காக, அதிகாரிகள் 12டி விண்ணப்பத்துடன் அங்கு சென்றுள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஓட்டுப்போடுவதை வரவேற்கும் நாங்கள், ஓட்டுச்சாவடிக்கு வர முடியாதவர்களுக்கு இந்த ஏற்பாட்டை செய்துள்ளோம்.
இந்த நடவடிக்கையில், ரகசியம் கடைபிடிக்கப்படும். அனைத்து நடவடிக்கைகளும் வீடியோப்பதிவு செய்யப்படும். வீட்டில் இருந்து ஓட்டுப்பதிவு செய்யும் நடவடிக்கைகள் குறித்து கட்சிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்காக ‘சாக்ஷம்’ என்ற மொபைல் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. அதில், அவர்கள் முன்பதிவு செய்து, தாங்கள் எந்த வகையில் ஓட்டளிக்க போகிறோம் என்ற வசதியை முடிவு செய்து கொள்ளலாம்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பேரணி மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி கேட்க ‘சுவிதா’ என்ற செயலியை பயன்படுத்தி கொள்ளலாம். மே 24க்கு முன்னர் கர்நாடக சட்டசபை தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement