மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா வென்றது.
கடைசி டெஸ்ட்
ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 320 ஓட்டங்களும், மேற்கிந்திய தீவுகள் 251 ஓட்டங்களும் எடுத்தன.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 321 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
@windiescricket
பவுமா 172
கேப்டன் பவுமா 172 ஓட்டங்களும், முல்டர் 42 ஓட்டங்களும் விளாசினர். மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ஹோல்டர் மற்றும் மேயர்ஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் 391 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் களமிறங்கியது. ஆனால் தொடக்கத்திலேயே அந்த அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது. விக்கெட் கீப்பர் ஜோஷ்வா டா சில்வா மட்டும் ஒருபுறம் போராடினார்.
எனினும் மேற்கிந்திய தீவுகள் அணி 106 ஓட்டங்களுக்கு சுருண்டது.
ஜோஷ்வா 52 பந்துகளில் 34 ஓட்டங்களும், ஹோல்டர் 19 ஓட்டங்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஹர்மர், கோட்ஸீ தலா 3 விக்கெட்டுகளும், கேஷவ் மகாராஜ் மற்றும் ரபாடா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
@ProteasMenCSA
ஒயிட்வாஷ்
தென் ஆப்பிரிக்க 284 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.
சதம் விளாசிய பவுமா ஆட்டநாயகன் விருதையும், எய்டன் மார்க்ரம் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
@ProteasMenCSA
@windiescricket