இலங்கையில் அதிகரித்துள்ள விவாகரத்துக்கள்


பெரும்பாலான இலங்கையர்கள் விவாகரத்து மற்றும் பராமரிப்பு வழக்குகளுக்கு சட்ட உதவி கோரியுள்ளதாக இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டில் மாத்திரம் 8431 விவாகரத்து வழக்குகளுக்கு சட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு வழக்குகள் மற்றும் குடும்ப வன்முறை வழக்குகளில் குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியவர்களுக்கு அவர்களின் வருமான பதிவுகளை அழைக்காமலேயே சட்ட உதவி வழங்கப்படுகிறது.

இலங்கையில் அதிகரித்துள்ள விவாகரத்துக்கள் | Divorces On The Rise In Sri Lanka

சனத்தொகையை பொறுத்தமட்டில் கிழக்கு மாகாணத்தில் இருந்து அதிகளவான பராமரிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன என இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் கௌசல்யா ஹப்புஆராச்சி தெரிவித்தார்.

“2011 முதல் 2021 வரையான 10 ஆண்டுகளில் 9916540 பேருக்கு சட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு மாத்திரம் 169,215 பேருக்கு சட்ட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதுடன் 49,479 பேர் சட்ட நடவடிக்கைகளில் ஆஜராகியுள்ளதாக பிரதிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.