தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் அருகே சோரீஸ்புரம் என்ற பகுதியில் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் நகை அடகு கடை முன்பு மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
முத்துக்குமார் வழக்கறிஞர் என்பதால் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்ட இருக்கலாம் என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றொருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான ரமேஷ் என்பவர் போலீஸ் கையில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 5 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான ஜெயபிரகாஷ் இருக்கும் இடம் குறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் ஜெயபிரகாஷை சுற்றிவளைத்தனர்.
அப்பொழுது அங்கிருந்து ஜெயபிரகாஷ் தப்பிவோட முயற்சித்ததில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் காலில் குண்டடிப்பட்டு படுகாயம் அடைந்த ஜெயப்பிரகாஷ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் பிரபல ரவுடி சஞ்சய் ராஜா கோவைக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது காவல்துறையினரை தாக்கி விட்டு தப்ப முயன்ற நிலையில் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதேபோன்று பூவனூர் பகுதியில் ராஜ்குமார் கொலை வழக்கில் பிரவீன் என்ற நபரை மல்லிப்பட்டினம் பகுதியில் போலீசார் சுட்டு பிடித்தனர். ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 3 ரவுடிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் சம்பவம் ரவுடிகளை கதிகலங்க செய்துள்ளது.