சென்னை: போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் தனியார் அமைப்பின் நிர்வாகி ஹரிஷின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. ஹரிஷின் தனியார் அமைப்பு இதுவரை 50 பேருக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கியது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆடுதுறையில் உள்ள ஹரிஷின் வங்கி கணக்கை முடக்கி சென்னை போலீசார் பணப்பரிவர்த்தனை ஆய்வு செய்கின்றனர்.