வெளிநாட்டுப் பெண்ணை 6 ஆண்டுகளாக மிரட்டி துஷிரயோகம் செய்துவந்த மும்பை சிஓஓ கைது


இந்தியாவில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக போலந்து நாட்டைச் சேர்ந்த சக ஊழியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மும்பை நபர் கைது செய்யப்பட்டார்.

போலந்து நாட்டுப் பெண்

போலந்து நாட்டவரான தனது சக ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மும்பை நபர், அப்பெண்ணுக்கு தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பியதாகவும், அப்பெண்ணின் அந்தரங்க வீடியோக்களை படம்பிடித்து அவரது உறவினர்கள் மற்றும் சக ஊழியர்களிடம் கசியவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட மணீஷ் காந்தி, மும்பையின் புறநகர் பகுதியான அந்தேரியில் உள்ள ABEC நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் ஆவார். பாதிக்கப்பட்ட போலந்து பெண் 2016-ல் அந்த நிறுவனத்தில் சேர்ந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டுப் பெண்ணை 6 ஆண்டுகளாக மிரட்டி துஷிரயோகம் செய்துவந்த மும்பை சிஓஓ கைது | Manish Gandhi Blackmail Polish Women Over 6 YearsHT

2016 முதல் துஷ்பிரயோகம்

மும்பை காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின்படி, மணீஷ் காந்தி நவம்பர் 2016 முதல் ஆறு வருட காலப்பகுதியில் போலந்து பெண்ணை பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

மனிஷ் தனது அந்தரங்க புகைப்படங்களை அனுப்பியதில் இருந்து தனக்கு துன்புறுத்தல் தொடங்கியதாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

2016-ஆம் ஆண்டு முதல், இருவரும் வேலைக்காக ஒன்றாகச் சென்றபோது, ஜேர்ர்மனி முழுவதும் பல்வேறு இடங்களில், இந்தியாவில் புது தில்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் காந்தியால் பலமுறை துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக புகார் அளித்தவர் கூறியதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெளிநாட்டுப் பெண்ணை 6 ஆண்டுகளாக மிரட்டி துஷிரயோகம் செய்துவந்த மும்பை சிஓஓ கைது | Manish Gandhi Blackmail Polish Women Over 6 Yearsexhibitionshowcase

குற்றம் சாட்டப்பட்ட மணீஷ் காந்திக்கு எதிராக மும்பையின் அம்போலி காவல் நிலையத்தில், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை, கிரிமினல் மிரட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மும்பை பொலிஸார் கூறினர்.

தற்போது, மனிஷ் காந்தி தலைமறைவாகியுள்ளதால்,பொலிஸார் குற்றவாளிகளைத் தேடி வருவதாகவும், மேற்கொண்டு விசாரணை நடத்திவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.