மும்பை: லண்டனில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில் தந்திரமாக கழிப்பறையில் புகைப்பிடித்த அமெரிக்க பயணி மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
லண்டனில் இருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. அப்போது அமெரிக்க குடிமகனான ரமாகாந்த் (37) என்பவர் விமானத்தில் பயணம் செய்துள்ளார். இவர் குடிப்போதையில் இருந்ததால், விமானத்தில் பயணம் செய்த சக பயணியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து இந்த பயணியை விமான ஊழியர் எச்சரித்துள்ளார்.
இதையடுத்து ரமாகாந்த் விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்றுள்ளார். சக பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் விமானத்தின் கழிப்பறையில் சென்று புகைப்பிடித்துள்ளார்.
இந்நிலையில் விமானத்தின் பயணித்த சகபயணி ஒருவர் மும்பை போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அமெரிக்க பயணியான ரமாகாந்த் மீது மும்பை சாகர் போலீஸ் ஸ்டேஷன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில்,
சக பயணி அளித்த புகாரின் அடிப்படையில், விமான கழிப்பறையில் புகைப்பிடித்த அமெரிக்க பயணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவர்.
ஆனால் அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளார். விமான நிலையங்களில் சமீபகாலமாக குற்றச் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement