பாகிஸ்தான் பொருளாதார அழிவின் விளிம்பில் இருப்பதாக இந்திய ஊடங்கங்கள் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறார்கள் என முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான்
பாகிஸ்தான் கடும் பொருளாதார சிக்கலில் தவித்து வருகிறது. வரலாறு காணாத வகையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.272க்கு அங்கு உயர்ந்துள்ளது.
ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், எரிபொருள் உயர்வால் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் பாகிஸ்தானில் எழுந்துள்ளது.
இம்ரான் கான் வேதனை
இந்த நிலையில் கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறுகையில்,
‘இந்திய ஊடகங்கள் பாகிஸ்தான் பொருளாதார அழிவின் விளிம்பில் இருப்பதாக மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறார்கள். முகமது அலி ஜின்னாவின் கனவு ஆபத்தில் உள்ளது.
எங்கள் பாதுகாப்பிற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தோம்? கடுமையான பொருளாதார நெருக்கடிகள் இருந்தபோதிலும் நாம் ஏன் ராணுவத்தை பராமரித்தோம்? பின்னர் பாகிஸ்தான் ராணுவம் எங்களை பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையை அளித்தது’ என தெரிவித்துள்ளார்.
“𝑯𝒊𝒏𝒅𝒖𝒔𝒕𝒂𝒏 𝒌𝒆𝒚 𝑻𝑽 𝒑𝒆 𝒅𝒊𝒌𝒉𝒆𝒚, 𝒌𝒊𝒔 𝒕𝒂𝒓𝒂𝒉 𝒎𝒂𝒛𝒂𝒌 𝒖𝒅𝒅 𝒓𝒂 𝒉𝒂𝒊 𝑷𝒂𝒌𝒊𝒔𝒕𝒂𝒏 𝒌𝒂” (watch how on Indian TV channels they are making fun of Pakistan), says Pakistan’s former PM Imran Khan pointing to his country’s economic situation pic.twitter.com/kMlh2MATDB
— Sidhant Sibal (@sidhant) March 11, 2023
மேலும் அவர், பாகிஸ்தான் விரைவில் இந்தியாவுடன் மீண்டும் இணையும் எனவும் ஊடகங்கள் கேலி செய்வதாக குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் உணவுப் பற்றாக்குறை, திடீர் வெள்ளம் மற்றும் வறுமையால் இந்த நெருக்கடியை சந்தித்துள்ளது.
@YouTube/PTI