சால்ட் அண்ட் பெப்பரில் விஜய் – அப்போ லியோ கதை இப்படித்தான் இருக்குமாம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம், ‘லியோ’. இதில் த்ரிஷா, அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். அந்த வரிசையில் தற்போது வில்லன்கள் லிஸ்டில் நடிகர் பாபு ஆண்டனியும் இணைந்துள்ளார்.

அனிருத் இசை அமைத்திருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் லியோ படத்தில் சஞ்சய் தத் காஷ்மீர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இணைந்த வீடியோவை படக்குழு நேற்று பகிர்ந்துள்ளது. 

அந்த வீடியோவில் தற்போது விஜயின் கெட்டப் இணையத்தை கலக்கி வருகிறது. பலரும் விஜயின் கெட்டப்பை பார்த்து வாயடைத்து போய் இருக்கிறார்கள். Salt and pepper கெட்டப்பில் தளபதி மாஸாக இருக்கிறார் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகின்றனர். ஏற்கனவே இந்தப் படத்தின் டைட்டில் டீஸர் கடந்த மாதம் வெளியான நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. 

ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் நிறைவேறும்

கடந்த மாத இறுதியில் தன்னுடைய பகுதிக்கான படப்பிடிப்பை முடித்த இயக்குனர் மிஷ்கின் -12 டிகிரியில் 500 பேர் கொண்ட பட குழுவினர்  தன்னுடைய பகுதிக்கான ஷூட்டிங்கை முடித்து விட்டதாக அறிவித்திருந்தார். மேலும் விஜய் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பட குழுவினருக்கு தன்னுடைய நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்திருந்தார். மேலும், லியோ படத்தின் வசனகர்த்தாவான ரத்னகுமார்  லியோ படம் எதிர்பார்த்ததை விட பெரிய அளவில் இருக்கும் என்று கூறியிருந்தார். ஒட்டுமொத்தமாக படம் உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் என்று தெரிவித்திருந்தார்.

நீக்கப்பட்ட ஹாலிவுட் படம்?

இப்படியாக விஜய் ரசிகர்கள் லியோ படத்தின் அப்டேட்டுக்காக வெறித்தனமாக காத்திருக்க, ஒரு பக்கம் சினிமா விமர்சகர்கள் , இது ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் காப்பி என்றும் History of Violence என்ற ஹாலிவுட் படத்தின் காப்பி என்றும் கூறி வருகின்றனர். 

அது மட்டுமில்லாமல் History of Violence என்ற படம் அமேசான் பிரைமில் கடந்த மாதம் வரை இருந்ததாகவும் தற்போது இந்தப் படத்தின் உரிமையை லோகேஷ் கனகராஜ் வாங்கியதாக சொல்லப்பட்டதில் இருந்து அமேசான் பிரைம் இந்தியாவில் இருந்து அந்தப் படம் நீக்கப்பட்டுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனை கையில் எடுத்த நெடிசன்கள் லோகேஷ் கனகராஜையும் விஜயையும் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். 

History of Violence படத்தில் அமைதியான சுபாவம் படைத்த ஹீரோ ஒரு பார் ஓனராக இருப்பார். அவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் என மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார். இந்த நிலையில் அவரது பாரில் எதிர்பாராத விதமாக ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெறும் அதிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள அவர் அந்த இரண்டு எதிரிகளை வீழ்த்துவார். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் மீடியாவின் பார்வையில் விழ சாதுவான ஹீரோ தான் கடந்த காலத்தில் மிக பெரிய கேங்ஸ்டர் என வில்லன் அடையாளம் கண்டுவிடுவார். அதன் பிறகு என்ன நடக்கும் என்பதே History of Violence என்ற படத்தின் கதையாக இருக்கும்

Leo-வின் கதை?

இதே பாணியில்தான் லியோ படத்தின் கதையும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல விஜயும் வயதான அப்பா என்ற அடிப்படையில் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் தற்போது இருக்கிறார். என்னதான் ஹாலிவுட் கதையாக இருந்தாலும் LCU சாயலில் அதன் நெளிவு சுழிவுகளோடு படம் இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் இந்த படம் பான் இந்தியா படமாக இருக்கும் என்று சொல்லப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா லியோ பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.