லண்டனிலிருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணித்து வந்த இந்திய வம்சாவளி அமெரிக்கர் அலட்சியமாக செய்த காரியத்தால், அவர்மீது மும்பை பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
லண்டன்-மும்பை விமானத்தில்
ஏர் இந்தியா லண்டன்-மும்பை விமானத்தில் கழிவறையில் புகைபிடித்ததாகவும், மற்ற பயணிகளிடம் தவறாக நடந்து கொண்டதற்காகவும் இந்திய வம்சாவளி அமெரிக்க குடிமகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை பொலிஸார் தெரிவித்தனர்.
37 வயதான ரமாகாந்த் (Ramakant ), மார்ச் 11-ஆம் திகதி செவ்வாய்கிழமை நடுவானில் விமானத்தில் சிரமத்தை ஏற்படுத்தியதற்காக மும்பையின் சஹார் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளார்.
விமானத்தின் கதவை திறக்க முயன்றார்
“விமானத்தில் புகை பிடிக்கக் கூடாது, ஆனால் அவர் கழிவறைக்குச் சென்றதும் அலாரம் அடிக்கத் தொடங்கியது, நாங்கள் அனைவரும் குளியலறையை நோக்கி ஓடியபோது, அவர் கையில் சிகரெட் இருப்பதைக் கண்டோம், நாங்கள் உடனடியாக அவர் கையிலிருந்து சிகரெட்டை வீசினோம். பின்னர் ரமாகாந்த் எங்கள் பணியாளர்கள் அனைவரையும் கூச்சலிட்த் தொடங்கினார். எப்படியோ அவரை இருக்கைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் சிறிது நேரம் கழித்து அவர் விமானத்தின் கதவை திறக்க முயன்றார். அவரது நடத்தையாலும் அலப்பறை செய்ததாலும் விமானத்தில் பயணிகள் அனைவரும் பயந்தனர் ஆரம்பித்தார். அவர் நாங்கள் சொல்வதைக் கேட்கத் தயாராக இல்லை, கத்திக் கொண்டிருந்தார். பிறகு நாங்கள் அவரது கைகளையும் கால்களையும் கட்டி அவரை இருக்கையில் உட்கார வைத்தோம்” என்று ஏர் இந்தியாவின் பணியாளர் சஹார் காவல்துறையிடம் தெரிவித்தார்.
அதன்பிறகு ரமாகாந்த் இடைவிடாமல் தலையை முட்டிக்கொண்டிருந்தார்.
“பயணிகளில் ஒருவர் மருத்துவர். அவர் வந்து அவரைப் பரிசோதித்தார். அப்போது ரமாகாந்த் தனது பையில் மருந்து இருப்பதாகக் கூறினார், ஆனால் எங்களிடம் எதுவும் கிடைக்கவில்லை, ஆனால் பையை சோதனை செய்தபோது ஒரு இ-சிகரெட் மீட்கப்பட்டது,” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
flight-report
வழக்குப் பதிவு
விமானம் தரையிறங்கியதும், பயணி ராம்காந்த் சஹார் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டார். அங்கு அவர் கைது செய்யப்பட்டு ஐபிசியின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், ஆனால் அவர் அமெரிக்காவின் குடியுரிமை பெற்றவர் என்றும் அமெரிக்க பாஸ்போர்ட்டை வைத்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் குடிபோதையில் இருந்தாரா அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவரா என்பதை உறுதிப்படுத்த அவரது மாதிரியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மும்பை காவல்துறையின் கூற்றுப்படி, இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 336 (மனித உயிருக்கோ அல்லது மற்றவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கோ ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அவசரமாகவோ அல்லது அலட்சியமாகவோ செய்பவர்கள்) மற்றும் விமானச் சட்டம் 1937, 22 (பைலட்-இன்-கமாண்ட் வழங்கிய சட்டப்பூர்வ அறிவுறுத்தலைப் பின்பற்ற மறுத்தல்), 23 (தாக்குதல் மற்றும் பிற செயல்கள் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் அல்லது நல்ல ஒழுங்கு மற்றும் ஒழுக்கத்தை பாதிக்கும்) மற்றும் 25 (புகைபிடிப்பதற்காக) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.