மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் மாமியாரின் மூக்கை மருமகன் அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் மோர்னியா மாவட்டம் சந்தப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஹ்மத் பகேல் – ராம் விலாசி தம்பதிக்கு ஷியாம் சுந்தரி என்ற மகள் உள்ளார். அவரை பக்கத்து ஊரில் வசிக்கும் ராஜூ பகேல் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.
பின்னர் ஷியாம் சுந்தரிக்கும் மருமகன் ராஜூவுக்கும் சமீப காலமாக பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. ஷியாம் சுந்தரியை ராஜூ தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதையடுத்து ஷியாம் சுந்தரி போலீசில் புகார் அளித்துவிட்டு கணவனைப் பிரிந்து செல்ல முடிவு செய்தார்.
அவர் தன்னை பார்க்க வந்து பெற்றோருடன் புறப்பட்ட தயாரானார். அப்போது மருமகன் ராஜூ தனது உறவினர்களுடன் சேர்ந்து மாமனார், மாமியாரை இடை மறித்து தகராறு செய்துள்ளார்.
திடீரென ஆத்திரத்தில் அவரது மாமியார் ஷியாம் சுந்தரியின் மூக்கை அறுத்துவிட்டு தப்பியோடினார். இதனையடுத்து, காயம் அடைந்த பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது தொடர்பாக காவல் துறையிடம் புகார் அளித்த நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. தனது மனைவியை மாமியார் தூண்டிவிட்டு பிரச்சனை உருவாக்குவதாக கூறி மருமகன் ராஜூ மூக்கை அறுத்ததாக கூறப்படுகிறது.
newstm.in