ஆஸ்கர் விருதை வெல்லுமா இந்திய படங்கள்?: எதிர்பார்ப்பில் சினிமா ரசிகர்கள்
95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் டால்பி தியேட்டரில் இன்று (மார்ச் 12) இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. அதாவது இந்திய நேரப்படி திங்கள் கிழமை (மார்ச் 13) காலை 5:30 மணிக்கு துவங்குகிறது. பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ள நிலையில், இந்தியா சார்பில் 4 படங்கள் போட்டியிடுகின்றன.
சிறந்த ஒரிஜனல் பாடல் பிரிவில் தெலுங்குத் திரைப்படமான 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் தேர்வாகியுள்ளது.
சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவில் 'செல்லோ ஷோ' படமும், சிறந்த டாகுமென்டரி திரைப்படப் பிரிவில் 'ஆர் தட் ப்ரீத்ஸ்' படமும், சிறந்த டாகுமென்டரி குறும்படப் பிரிவில் 'த எலிபன்ட் விஸ்பரர்ஸ்' படமும் தேர்வாகியுள்ளது.
மற்ற பிரிவுகளில் போட்டியிடும் படங்களின் பட்டியல்
சிறந்த திரைப்படம் பிரிவு
அவதார் : தி வே ஆப் வாட்டர்
ஆல் கொயட் ஆன் த வெஸ்டர்ன் பிரண்ட்
தி பன்ஷீஸ் ஆப் இனிஷெரின்
எல்விஸ்
எவ்ரித்திங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்
தி பேபல்மேன்ஸ்
டர்
டாப் கன்: மேவ்ரிக்
டிரையான்கிள் ஆப் சேட்னஸ்
உமன் டாக்கிங்
சிறந்த இயக்குனர் பிரிவு
ஸ்டீபன் ஸ்பீல்பர்க் (தி பேபல்மேன்ஸ்)
மார்ட்டின் மெக்டொனாக் (தி பன்ஷீஸ் ஆப் இனிஷெரின்)
டேனியல் வான் மற்றும் டேனியல் ஷெய்னெர்ட் (இயாவ்)
டாட் பீல்ட் (டர்)
ரூபன் ஆஸ்ட்லண்ட் (டிரையான்கிள் ஆப் சேட்னஸ்)
சிறந்த நடிகர் பிரிவு
ஆஸ்டின் பட்லர் (எல்விஸ்)
காலின் பாரல் (தி பன்ஷீஸ் ஆப் இனிஷெரின்)
பிரண்டன் ப்ரசர் (தி வேல்)
பால் மெஸ்சல் (ஆப்டர் சன்)
பில் நைகி (லிவிங்)
சிறந்த நடிகை பிரிவு
கேட் பிளான்செட் (டர்)
அனா டி அர்மாஸ் (பிளண்ட்)
ஆண்ட்ரியா ரைஸ்பரோ (டு லெஸ்லி)
மைக்கேல் வில்லியம்ஸ் (தி பேபல்மேன்ஸ்)
மைக்கேல் யோவ் (இயாவ்)
சிறந்த ஒளிப்பதிவு பிரிவு
ஜேம்ஸ் பிரெண்ட் (ஆல் கொயட் ஆன் த வெஸ்டர்ன் பிரண்ட்)
டேரியஸ் கோண்ட்ஜி (பார்டோ, பால்ஸ் கிரானிக்கிள் ஆப் எ ஹேண்ட்புல் ஆப் ட்ரூத்)
மாண்டி வாக்கர் (எல்விஸ்)
ரோஜர் டீக்கின்ஸ் (எம்பயர் ஆப் லைட்)
ப்ளோரியன் ஹாப்மீஸ்டர் (டர்)
சர்வதேச திரைப்படங்கள் பிரிவு
செல்லோ ஷோ (இந்தியா)
ஆல் கொயட் ஆன் த வெஸ்டர்ன் பிரண்ட் (ஜெர்மனி)
அர்ஜென்டினா, 1985 (அர்ஜென்டினா)
க்ளோஸ் (பெல்ஜியம்)
இஓ (போலந்து)
தி கொயட் கேர்ஸ் (அயர்லாந்து)
சிறந்த ஒரிஜனல் பாடல், சிறந்த சர்வதேசத் திரைப்படம், சிறந்த டாகுமென்டரி திரைப்படம், சிறந்த டாகுமென்டரி குறும்படம் ஆகிய நான்கு பிரிவுகளில் போட்டியிடும் இந்திய படங்களில் எந்த படம் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமையைத் தேடித் தரப் போகிறது என அனைத்திந்திய சினிமா ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.