ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம்: மத்திய அரசு மறுப்பு| Legal recognition of same-sex marriage: Central government refuses

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.

இது தொடர்பான வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது. கணவன், மனைவி, குழந்தைகள் என இருக்கும் இந்தியாவின் குடும்ப கட்டமைப்புக்கு இணையாக தன்பாலினத் திருமணங்களை பொருத்திப் பார்க்க முடியாது. தன்பாலினத் திருமணங்களை அங்கீகரிக்காததால், எந்த ஒரு அடிப்படை உரிமையும் மீறப்படவில்லை. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.