பத்து தல படத்திற்காக ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடிய மகன் அமீன்!
கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் பத்து தல. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படம் மார்ச் 30ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது புரமோஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மார்ச் 13ம் தேதியான நாளை மாலை 6 மணிக்கு பத்து தல படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நினைவிருக்கா என்று தொடங்கும் அந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் பின்னணி பாடியிருக்கிறார். தற்போது அந்த பாடல் குறித்த போட்டோக்கள் வெளியாகியுள்ளது.