வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: ”சட்டசபை தேர்தல்கள், லோக்சபாவுக்கு பல தேர்தல்கள் நடத்தி இருந்தாலும், ஒவ்வொரு தேர்தலும், ஆணையத்திற்கு அக்னி பரீட்சையாக அமைகிறது”, என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் கூறியுள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ்குமாரிடம் நேர்மையான மற்றும் சுதந்திரமான தேர்தல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்து ராஜிவ் குமார் கூறியதாவது: திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தல்களை சேர்த்து 400 சட்டசபை தேர்தல்கள், லோக்சபாவுக்கு 17 தேர்தல்கள், ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி பதவிகளுக்கு 16 முறை தேர்தல் நடத்திய அனுபவம் தேர்தல் கமிஷனுக்கு உண்டு. தேர்தல் முடிந்த பிறகு, முடிவுகளை ஏற்று கொண்டனர். ஓட்டுச்சீட்டு மூலம் அதிகாரங்கள அமைதியாக மாற்றப்பட்டன.
கடந்த 70 ஆண்டுகளில் இந்தியா தனது சமூக, கலாசார, அரசியல், புவியியல், பொருளாதாரம், மொழியியல் பிரச்னைகளை அமைதியான முறையிலும், பேச்சுவார்த்தை மூலமாகவும் நிலைநிறுத்தி உள்ளது. இதற்கு முக்கிய காரணம், ஜனநாயகத்தில் தேர்தல் முடிவுகளை மக்கள் ஏற்று கொண்டதால் மட்டுமே இது சாத்தியமாகும். இருப்பினும், தற்போது ஒவ்வொரு தேர்தலும், தேர்தல் ஆணையத்திற்கு அக்னி பரீட்சையாகவே அமைகிறது. இவ்வாறு ராஜிவ் குமார் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement