தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியில் அமைந்துள்ள பெந்தகோஸ்தே கிறிஸ்தவ சபையின் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள், நாடுகளிலிருந்து சுமார் 1000 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாலை இந்த கூட்டம் முடிந்து ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் புறப்பட்டு சென்றதால், ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தன. குறிப்பாக இரும்புலியூர் ஏரிக்கரை பகுதியில் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டானது.
ஒரே நேரத்தி கிறிஸ்தவ சபை பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாலையை கடக்க முயல்வதால் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலில் ஏற்பட்டு வருகிறது.
இதன் காரணமாக தாம்பரம்-செங்கல்பட்டு செல்லும் வாகனங்கள் ஆமை போல ஊர்ந்து செல்கின்றன. இடையில் இரண்டொரு ஆம்புலன்ஸ் வாகனங்களும் சிக்கி க்கொண்டன.
இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். போக்குவரத்து காவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்