காஞ்சிபுரத்தில் கணவன் இறந்த செய்திகேட்டு, மனைவியும் மாரடைப்பால் பலியான சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாவாபேட்டை தெருவை சேர்ந்த பாஜக தமிழ்நாடு மாநில அமைப்பு சாரா தொழிலாளர் சங்க துணைத் தலைவர் கணேஷ்.
இவரின் தந்தை துரைசாமி (வயது 77), தாய் மல்லிகா (வயது 68) இருவரையும் இவரே கவனித்து வருகிறார்.
இந்த நிலையில், சம்பவம் நடந்த இன்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த துரைசாமிக்கு, திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு துரைசாமி கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனைத் அடுத்து, தந்தையின் உடலை கணேஷ் வீட்டுக்கு எடுத்து வந்த உள்ளார். அப்போது தாய் மல்லிகாவிடம் தந்தையின் மரணம் குறித்து கணேஷ் தெரிவித்து உள்ளார்.
கணவர் துரைசாமி இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த மல்லிகா மறைப்பு ஏற்பட்டு மயங்கினர். அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையம், அவரும் மாரடைப்பால் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
கணவன் மரணத்தை தொடர்ந்து மனைவியும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி வாசிகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், பாஜக பிரமுகரின் தாய், தந்தை மரணம் அரசியல் பிரமுகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.