நிதியமைச்சருக்கு தேர்தல் ஆணைக்குழுவால் அனுப்பப்பட்ட அவசர கடிதம்!


உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பணத்தை விடுவிக்குமாறு நிதியமைச்சரிடம் தேர்தல் ஆணைக்குழு எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த கோரிக்கையை இன்றைய தினம் (13.03.2023) நிதியமைச்சர் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் விடுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான நிதியை கொடுப்பது தொடர்பில் நேரடித் தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் அதற்கு நிதி அமைச்சரின் அனுமதியைப் பெற வேண்டும் எனவும் நிதி அமைச்சின் செயலாளர் அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார்.

நிதியமைச்சருக்கு தேர்தல் ஆணைக்குழுவால் அனுப்பப்பட்ட அவசர கடிதம்! | Urgent Letter Addressed To Finance Minister

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

இதற்கமைய, தேர்தலுக்குத் தேவையான நிதியை விடுவிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு நிதி அமைச்சரிடம் எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்ததாக நிமல் ஜி. புஞ்சிஹேவா கூறியுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு நிதிப் பற்றாக்குறை காரணமாக மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதி இதுவரை கிடைக்கப்பெறாததால், வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணியை ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக பிரதானி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் தபால் மூல வாக்குச்சீட்டுக்களைத் தபால் நிலையத்திற்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கங்கானி லியனகே குறிப்பிட்டுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.