கடலூர்: மகனின் மருத்துவ படிப்புக்கு பணம் இல்லாததால் தாய் தற்கொலை செய்து கொண்டார். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நாராயணன் நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை (55). இவரது மனைவி வைரம் (48). இவர்களது மகன் மணிந்தர். இவர் பிலிப்பைன்சில் 4ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். இவரது படிப்பு செலவுக்கு வருடத்திற்கு ரூ.7 லட்சம் செலவாகி உள்ளது.
தற்போது அந்த பணத்தை தயார் செய்ய முடியாததால், வைரம் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதனால், சம்பவத்தன்று எலி பேஸ்ட்டை தின்று மயங்கி கிடந்தார். சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.