துபாய் :ஈரான் – அமெரிக்கா இடையே, கைதிகள் பரிமாற்றம் விரைவில் துவங்க உள்ளதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹோசைன் அமிராப்தோல்லாஹியன் தெரிவித்தார்.
மேற்காசிய நாடான ஈரான் சிறையில் நான்கு அமெரிக்கர்கள் தற்போது சிறை வைக்கப்பட்டுள்ளனர். உளவு பார்த்த குற்றத்துக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே போல, அமெரிக்க சிறையிலும் ஈரானியர்கள் பலர் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
இரு நாடுகள் இடையே கைதிகளை பரிமாறிக் கொள்வது தொடர்பாக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக ஈரான் அரசு அவ்வப்போது தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், ‘டிவி’ பேட்டி ஒன்றில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹோசைன் அமிராப்தோல்லாஹியன் கூறுகையில், ”ஈரான் – அமெரிக்கா இடையே கைதிகளை பரிமாறிக்கொள்வது குறித்து இரு நாடுகள் இடையே உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. அமெரிக்க தரப்பில் அனைத்தும் சரியாக நடந்தால், கைதிகள் பரிமாற்றம் விரைவில் சாத்தியமாகும்,” என்றார்.
இது தொடர்பாக ஆதாரம் எதையும் அவர் வெளியிடவில்லை. அமெரிக்காவும் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement