வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஷாஜஹான்புர் :மாசடைந்து, சுருங்கி வரும் கோமதி நதியைக் காப்பாற்றும் நோக்கத்தில், மக்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்த, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஆர்வலர், ௬௯௦ கி.மீ., துார பாதயாத்திரையை மேற்கொண்டுஉள்ளார்.
உத்தர பிரதேசத்தில் கங்கை நதியின் கிளை நதியான கோமதி நதி, 690 கி.மீ., துாரத்துக்கு பயணம் செய்கிறது. ஆக்கிரமிப்புகள் மற்றும் கழிவுகள் சேர்க்கப்படுவதால், இந்த நதி மாசடைந்து வருகிறது. பல இடங்களில் சுருங்கியுள்ளது. ஒரு காலத்தில் வற்றாத நதியாக இருந்த கோமதி, தற்போது பருவகால நதியாக மாறிவிட்டது.
இந்த நதியை மீட்டெடுக்கும் முயற்சியில், ஷிப்ரா பதக் என்ற இயற்கை ஆர்வலர் பாதயாத்திரையை துவக்கியுள்ளார். உத்தர பிரதேசத்தின் பதாவுன் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், பிலிபிட் மாவட்டத்தில், கோமதி நதி உருவாகும் இடத்தில் இருந்து தன் பாதயாத்திரையை துவக்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
இந்த நதி பாயும் இடங்களில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள், இதன் தற்போதைய நிலையைப் பார்த்து வருத்தப்படுகின்றனர். இதை பாதுகாக்க தங்களால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் உள்ளனர்.
சிறிய சிறிய அளவிலான முயற்சிகள் மேற்கொண்டாலே, நதியைக் காப்பாற்ற முடியும் என்று அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். பலர் எனக்கு ஆதரவு தெரிவித்து பாதயாத்திரையில் இணைந்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement