மும்பை : லண்டனில் இருந்து மும்பை வந்த, ‘ஏர் இந்தியா’ விமானத்தில் பயணி ஒருவர் கழிப்பறையில் புகை பிடித்ததுடன், விமான விதிகளை மீறி ஊழியர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தலைநகர் லண்டனில் இருந்து மஹாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் சமீபத்தில் வந்து கொண்டிருந்தது.
அதில் வந்த பயணி, கழிப்பறையில் புகை பிடித்துக் கொண்டிருந்தார். இதை விமான ஊழியர்கள் கண்டித்தனர். அந்த பயணி ஊழியர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார்.
இதையடுத்து, விமானம் மும்பை வந்ததும், விமான நிலைய போலீசாரிடம் அந்த பயணி ஒப்படைக்கப்பட்டார்.
இது குறித்து விமான போக்குவரத்து இயக்குனரகத்திடமும் விமான நிறுவனம் புகார் அளித்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement