சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கவுள்ள நிலையில், மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுதேர்வுகள் இன்று தொடங்குகிறது. 8.8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்த பொதுத் தேர்வினை எழுத உள்ளனர். இதற்காக 3,169 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 90 சிறைவாசிகளும் தேர்வு எழுதுகின்றனர். இந்த நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துக்களையும், அறிவுரைகளையும் வழங்கி வீடியோ […]