இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கிடயிலான ,முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இறுதி நாள்

சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இறுதி நாள் இன்றாகும்.

285 ஓட்டங்கள் என்ற வெற்றி இலங்கை நோக்கி துடுப்பெடுத்தாடும் நியூசிலாந்து அணி நேற்றைய (12) ஆட்டநேர முடிவின் போது 2 விக்கெட் இழப்பிற்கு 85 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இரண்டாம் இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 302 ஓட்டங்களை பெற்றது. அணியின் சார்பாக அஞ்சலோ மெத்தியூஸ் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 115 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இதன்மூலம் 14ஆவது டெஸ்ட் சதத்தை மத்தியூஸ் பதிவு செய்துள்ளார்.

இலங்கை அணி முதல் இனிங்சில் 355 ஓட்டங்களையும் நியூசிலாந்து அணி அதன் முதன் இனிங்சில் 373 ஓட்டங்களையும் பெற்றிருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.