ஆஸ்கரில் தடம் பதித்த முதுமலை யானை! அகாடமி விருது வென்ற The Elephant Whisperers

Oscars 2023: அகாடமி விருதுகளில், சிறந்த டாகுமென்டரி குறும்படப் பிரிவில் இந்தியாவின் ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ குறும்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுகளை இந்தியா வென்றுள்ளது அனைவருக்கும் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸஸ் நடைபெற்ற 95-ஆவது அகாடமி விருது  வழங்கும் விழாவில் சிறந்த டாகுமென்டரி குறும்படப் பிரிவில் விருது பெற்ற ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’என்ற ஆவண குறும்படம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல, RRR திரைப்படத்தில் இடம் பெர்ற நாட்டு நாட்டு சிறந்த அசல் பாடலுக்கான 2023 அகாடமி விருதுகளை வென்றது. இதுமிகப்பெரிய சாதனையாகும். 95வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. 

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் எடுக்கப்பட்ட குறும்படம் இது. ஆசியாவின் மிகப்பெரிய வளர்ப்பு யானைகள் முகாமான தெப்பக்காட்டில், காட்டு நாயக்கர் பழங்குடியினத்தைச் சேர்ந்த யானை பராமரிப்பாளர்களின் கதை இது.

2017-ம் ஆண்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சரகம் அய்யூர் பகுதியில் தாயிடமிருந்து பிரிந்த ஆண் குட்டி யானை காயத்துடன் சுற்றித்திரிந்தது. இந்த யானையை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு வந்து, ரகு என பெயர் வைத்து  யானை பராமரிப்பாளர்களான பொம்மன், பெள்ளி தம்பதிகள் பராமரித்து வருகின்றனர்.

இயற்கையோடு இயைந்த காதல் மற்றும் சக உயிரினங்களின் வாழ்வை எதார்த்தமாக சொல்லும் இந்தக் கதைக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. 95வது அகாடமி விருதுகளில் எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் சிறந்த ஆவணப்படம் குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதைப் பெற்றதற்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்துவருகிறது.

நீலகிரி மாவட்டம், ஊட்டியைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் இயக்கிய ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ஆஸ்கர் விருது வென்றுள்ளது. சிறந்த டாகுமென்டரி திரைப்படப் பிரிவில் இடம்பெற்ற  ஆர் தட் ப்ரீத்ஸ் என்ற இந்திய திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.