95வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. ஒவ்வொரு முறையும் ஆஸ்கர் விருது விழா நடக்கும்போது இந்தியாவுக்கு ஒரு விருது கிடைக்காதா என இந்தியர்கள் ஏங்குவது உண்டு. இந்த ஆண்டு ஒன்றல்ல இரண்டு ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது இந்தியாவுக்கு.
Naatu Naatu Oscars: ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடல்: இந்திய வரலாற்றில் புது சாதனை
எஸ். ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் ஆகியோர் ஆடிய நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது. சிறந்த ஒரிஜினில் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய பாடல் இது.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
நாட்டு நாட்டு பாடல் தவிர்த்து கார்த்திகி கோன்சால்வஸ் இயக்கத்தில் குனீத் மோங்கா தயாரிப்பில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான The Elephant Whisperers படம் சிறந்த ஆவண குறும்பட பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறது.
இது குறித்து குனீத் மோங்கா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ஒரு இந்திய தயாரிப்புக்கு முதல் முறையாக ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது. இரண்டு பெண்கள் இதை செய்திருக்கிறோம். இன்னும் நடுங்கிக் கொண்டிருக்கிறேன் என்றார்.
குனீத் மோங்கா மேலும் கூறியிருப்பதாவது,
இரண்டு பெண்களுக்கு இது கிடைத்திருக்கிறது. அம்மா, அப்பா, குருஜி, இணை தயாரிப்பாளர் அச்சின் ஜெயின், சிக்யா குழு, நெட்ஃப்ளிக்ஸ், சரஃபினா, என் கணவர் சன்னி ஆகியோருக்கு நன்றி.
இந்த கதையை கொண்டு வந்த கார்த்திகிக்கு நன்றி. ஜெய் ஹிந்த். இந்தியாவை சேர்ந்த இரண்டு பெண்கள் உலக மேடையில் நின்று சரித்திர வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த படத்தை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்திய தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்திய படம் ஒன்று முதல் முறையாக ஆஸ்கர் விருது வென்றிருக்கிறது. அந்த பெருமை சிக்யா என்டர்டெயின்மென்ட் எனும் இந்திய தயாரிப்பு நிறுவனத்திற்கு கிடைத்திருக்கிறது.
கார்த்திகிக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நெட்ஃப்ளிக்ஸ் எங்களுக்கு மிகப் பெரிய மேடை அமைத்துக் கொடுத்தது, எங்களை ஆதரித்தது. இந்திய சினிமாவின் எதிர்காலம் நன்றாக இருக்கிறது என்று நான் இன்று சொல்வேன் என்றார்.
The Elephant Whisperers படம் 41 நிமிடங்கள் ஓடக்கூடியது. நெட்ஃப்ளிக்ஸில் இருக்கும் அந்த படம் கைவிடப்பட்ட ரகு என்கிற யானையை ஒரு தம்பதி எப்படி பாதுகாக்கிறார்கள் என்பது பற்றியது. ரகுவுக்கும், அந்த தம்பதிக்கும் இடையே ஏற்படும் பந்தத்தை அழகாக காட்டியிருக்கிறார் கார்த்திகி.
Haul Out, How Do You Measure A Year, The Martha Mitchell Effect, Stranger At The Gate ஆகிய ஆவண குறும்படங்களுடன் The Elephant Whisperersம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அந்த படங்களை ஓரங்கட்டி ஆஸ்கர் விருது வென்றிருக்கிறது.
இரண்டு ஆஸ்கர் விருது கிடைத்த சந்தோஷத்தை இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.