சர்வதேச நாணய நிதியத்திலிருந்து நான்கு வருடங்களில்,03 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாடு பெற்றுக்கொள்ளவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணயத்தின் நிதி குறித்து சில பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் தொடர்பில், நிதி இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்..
ரூவன்வெல்ல பிரதேசத்தில் நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை ஏனை நிதி நிறுவனங்களிடமிருந்து நிதியை பெற்றுக்கொள்வதற்கு இந்த நிறுவனம் வழங்கும் தரச்சான்றிதழ் மிக முக்கியமானது. ஏனைய நிதி நிறுவனங்களில் இலங்கை மீதான நம்பிக்கையை கட்டியெழுப்ப இது பெரும் உறுதுணையாக இருக்கும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.