உலகில் மிகவும் உயரிய ஆஸ்கார் விருது வழக்கும் விழா இன்று அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதை
RRR
படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் தட்டி சென்றது.
ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் NTR இணைந்து நடித்த RRR திரைப்படம் கடந்தாண்டு வெளியானது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது ஆஸ்கார் விருதையும் பெற்று இந்திய சினிமாவிற்கே பெருமை சேர்த்துள்ளது.
Kamalhaasan: கமல் போட்ட திடீர் மீட்டிங்..பின்னணி என்ன ? குழப்பத்தில் கோலிவுட்..!
இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் 95 ஆவது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் RRR படத்திலிடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் இடம்பெற்றது. எனவே இந்த விருதை இப்பாடல் வெல்லுமா என்ற எதிரிபார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வந்தது.
இதையடுத்து RRR படக்குழு ஆஸ்கார் விழாவில் கலந்துகொண்டனர். ரசிகர்களுடன் சேர்ந்து அவர்களும் விருது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். இதையடுத்து விருது நாட்டு நாட்டு பாடலுக்கு கிடைத்ததை அடுத்து ரசிகர்களுடன் சேர்ந்து அவர்களும் உற்சாகக்கடலில் மிதந்தனர்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறகு இந்திய இசையமைப்பாளரான கீரவாணி இவ்விருதை பெற்று சாதனை பெற்றார். மேலும் இந்திய பாடலுக்காக ஆஸ்கார் விருதை பெற்ற முதல் இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையையும் பெற்றார் கீரவாணி.
இந்நிலையில் விருதை வாங்கிய கீரவாணி பேசியது என்னவென்றால், அமெரிக்காவில் இருக்கும் பிரபல இசைக்கலைஞர்களான தி கார்பெண்டர்ஸின் இசையை கேட்டு தான் நான் வளர்ந்தேன்.இதையடுத்து தற்போது ஆஸ்கார் விருதை வாங்கியுள்ளேன் என்று பெருமையாக பேசினார்.
மேலும் இந்த விருதை இந்திய திரையுலகிற்கும், ரசிகர்களும் சமர்ப்பிப்பதாகவும் கூறினார் கீரவாணி. இதைத்தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலிக்கு பாடல் பாடி நன்றி தெரிவித்த கீரவாணி இந்த விருதை சாத்தியமாக்கிய அனைவர்க்கும் நன்றி தெரிவித்தார். இந்நிலையில் ஆஸ்கார் விருதை பெற்ற முதல் இந்திய பாடல் என்ற பெருமையை நாட்டு நாட்டு பாடல் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.