95வது ஆஸ்கர் விருது விழாவில் எஸ். ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். படத்தில் வந்த நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருது கிடைத்திருக்கிறது. சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய பட பாடல் நாட்டு நாட்டு ஆகும்.
Naatu Naatu Oscars: ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடல்: இந்திய வரலாற்றில் புது சாதனை
நாட்டு நாட்டு செய்துள்ள இந்த சரித்திர சாதனையால் தெலுங்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் பெருமகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ராஜமவுலி, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஆஸ்கர் விருது விழாவை தொகுத்து வழங்கிய அமெரிக்காவை சேர்ந்த ஜிம்மி கிம்மலை இந்திய சினிமா ரசிகர்கள் விளாசி வருகிறார்கள். ஆர்.ஆர்.ஆர். ஒரு பாலிவுட் படம் என்றார் ஜிம்மி கெம்மல்.
இதையடுத்து இந்திய சினிமா ரசிகர்கள் கடுப்பாகி ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள். ட்விட்டரில் அவர்கள் கூறியிருப்பதாவது,
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
ஆர்.ஆர்.ஆர். ஒரு தென்னிந்திய படம், அதிலும் குறிப்பாக தெலுங்கு படம். சில ஆஸ்கர் மக்கள் கூறுவது போன்று பாலிவுட் படம் கிடையாது.
இந்தியாவில் மொழிகளின் அடிப்படையில் வெவ்வேறு திரையுலகம் உள்ளன. இந்தி படங்களை உருவாக்குவது தான் பாலிவுட். ஆர்.ஆர்.ஆர். ஒரு தெலுங்கு மொழி படம். தென்னிந்தியாவை சேர்ந்தது.
டியர் ஆஸ்கர்95 குழு, ஆர்ஆர்ஆர் ஒன்று பாலிவுட் படம் இல்லை. ஆஸ்கர் ஆட்களுக்கு சர்ச்சைகள் என்றால் மிகவும் பிடிக்கும் போன்று. ஆர்.ஆர்.ஆர். ஒரு இந்திய படம் என மாதக் கணக்கில் விளம்பரம் செய்தும் அதை பாலிவுட் படம் என்று கூறியிருக்கிறார்கள். இதே வேலையாப் போச்சு.
ஆர்.ஆர்.ஆர். ஒரு தெலுங்கு படம் என்பது கூடவா ஆஸ்கர் விருது விழாவை தொகுத்து வழங்கிய ஜிம்மி கிம்மலுக்கு தெரியாமல் போய்விட்டது. அடக்கடவுளே, இதெல்லாம் ரொம்ப ஓவராக இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.
முன்னதாக ஜனவரி மாதம் செய்தியாளர்களை சந்தித்த ராஜமவுலி கூறியதாவது,
The Elephant Whisperers Oscars: ஆஸ்கர் விருது வென்ற சூரரைப் போற்று பட தயாரிப்பாளர் குனீத் மோங்கா
ஆர்.ஆர்.ஆர். பாலிவுட் படம் இல்லை. இது நான் வசிக்கும் தென்னிந்தியாவை சேர்ந்த தெலுங்கு படம் ஆகும் என்றார்.
சர்வதேச அரங்கில் ஆர்.ஆர்.ஆர். படத்தை இந்திய படம் என்று சொல்லாமல் தெலுங்கு படம் என்று கூறுகிறாரே என ராஜமவுலியை சமூக வலைதளவாசிகள் அப்பொழுது விமர்சித்தார்கள்.
இந்நிலையில் ஜிம்மி கிம்மல் சிக்கியிருக்கிறார். ஆனால் பாலிவுட் ரசிகர்களோ, எங்கள் பாலிவுட் தான் உலக அளவில் பிரபலம் என்பது இதன் மூலம் தெரிகிறது என்கிறார்கள். மேலும் சில ரசிகர்களோ, பாலிவுட்டோ, டோலிவுட்டோ வேண்டாம். இந்திய படம் என்று சொல்லி அனைவரும் பெருமைப்படுவோம் என்கிறார்கள்.
ஆஸ்கர் விருது விழா மேடையில் நாட்டு நாட்டு பாடலை பாடி டான்ஸ் ஆடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.ஆர்.ஆர். குழுவை பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் அறிமுகம் செய்து வைத்தார்.